ஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..?

iphoneஐபோன் வாங்கியதில் இருந்து சரளமாக பயன்படுத்தி இன்று அந்தக் கருவி குறித்து எதையும் செய்ய தெரிந்திருந்தாலும் அந்தக் கருவியில் இருக்கும் சில விடயங்கள் எல்லோருக்கும் தெரிந்திருப்பதில்லை. ஐபோன் 5 மொடலில் துவங்கி ஒவ்வொரு ஐபோன் கருவியிலும் கமரா லென்ஸ் மற்றும் பிளாஷ் நடுவே சிறிய துளை வழங்கப்படுகின்றது. ஆனால் அந்த இடத்தில் அத்தகைய சிறிய துளை எதற்கு.? என்பது பற்றி பலருக்குத் தெரியாது.

இந்தச் சிறிய துளை உண்மையில் ஒரு மைக்ரோபோன் ஆகும். இந்த மைக்ரோபோன் உங்களது குரலை கவனிக்காமல் ‘நொய்ஸ் கேன்சலேஷன்’ எனப்படும் சத்தத்தை கட்டுப்படுத்தும் பணியினை மேற்கொள்ளும்.இருக்கும் இடத்தில் ஏற்படும் வெளிப்புற சத்தத்தினை தடுத்து அழைப்புகளின் போது மறுபக்கம் பேசுவோரின் குரலை கச்சிதமாகக் கேட்க வழி செய்யும்.

iphone
yourkattankudy/iphones

மேலும் இந்த மைக்ரோபோன் உங்களது குரலினை துல்லியமாகப் பதிவு செய்து ‘சிரி’ பயன்படுத்தும் போது உதவியாக இருக்கச் செய்யும்.

ஐபோன் கருவியில் மொத்தம் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை கருவியின் அடியில் ஒன்றும், முன் மற்றும் பின் புறங்களில் ஒவ்வொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment