உயிராபத்து எச்சரிக்கை விடுத்திருந்தும் 7 ரொஹொங்யா முஸ்லிம்களை நாடுகடத்திய இந்தியா

Bangladesh%20Denies%20Rohingya%20Muslims%20Entry[1]டெல்லி: இந்தியாவில் தங்கியிருந்த 7 ரொஹொங்யா முஸ்லிம்களை  வியாழக்கிழமை (04) மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது. குடியேற்ற விதிமுறைகளை மீறியதாக 2012ம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.  வியாழக்கிழமை காலை அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு மியான்மரில் நிகழ்ந்த வன்முறை தாக்குதலில் இருந்து தப்பித்து 7 லட்சம் ரொஹொங்யா முஸ்லிம்கள் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றனர். இந்த விவகாரத்தில் மியான்மர் ராணுவம் இன சுத்திகரிப்பு நடத்தியதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது.

Bangladesh%20Denies%20Rohingya%20Muslims%20Entry[1]
yourkattankudy/rohangya

ஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மியான்மர் ராணுவம் கூறுகிறது. இது குறித்து பேசிய இனவெறி பற்றிய ஐநாவின் சுயாதீன சிறப்பு நிபுணர் டென்டாயி அச்சியுமி, “இந்த மனிதர்களை நாடு கடத்தியுள்ளதன் மூலம், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழ சாத்தியமுள்ளதால் சர்வதேச சட்டக் கடமைகளை இந்தியா மீறியுள்ளது” என்று கூறியுள்ளார்.

“மனித இன அடையாளம் காரணமாக அவர்களின் பாதுகாப்பை மறுக்கின்ற தெளிவான நடவடிக்கை இதுவாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment