குப்பை கொட்டுமிடமாக காட்சி தரும் காஸா சர்வதேச விமான நிலையம்
– MJ
காஸா: 8 கோடி 60 லட்சம் டொலர் செலவில் அமைக்கப்பட்ட காஸா யாசிர் அரபாத் சர்வதேச விமான நிலையம் 1998ல் திறக்கப்பட்டது. 2001ம் ஆண்டிலிருந்து இங்கு விமானங்கள் எதுவும் வரவோ, இங்கிருந்து செல்லவோ இல்லை. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்களையடுத்து இவ்விமான நிலையம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. 08-10-2000 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை குண்டுகள் வீசி இஸ்ரேல் படைகளால் அழிக்கப்பட்டது.
வருடம் 365 நாட்களும், இரவு பகலாக இயங்கி வந்த காஸா சர்வதேச விமான நிலையம் தற்பொழுது குப்பை மேடாகவும், மந்தைகள் மேய்க்கும் இடமாகவும் காட்சியளிக்கிறது.
Leave a comment