சவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி

saudiதாயிஃப்: சவுதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாயிஃப் இல் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ் என்ற அந்த பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஓடிச்சென்ற அந்த பெண் அவரை கட்டிப்பிடித்தார்.

ஈரானில் பிறந்தவரும், சவுதி அரேபிய குடியுரிமை பெற்ற பாடகருமான மொஹாண்டிஸ் இந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து பாடினார். ஆனால், இந்த சம்பவம் குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

saudi

Published by

Leave a comment