குருக்கள் மடத்துப் பையன்

gurukkal-madaththu-paiyan_FrontImage_439– MJ

லண்டன்: 12-07-1990. கோடை வெயில். உஷ்ணத்தில் ஆங்காங்கே உருகி- புழுதி கலந்த காற்றில் காத்தான்குடி பிரதான வீதியில் ஆங்காங்கே இளைஞர்கள் குழுமி நிற்கின்றனர்.

கொழும்பிலிருந்து கல்முனை ஊடாகப் பயணித்த காத்தான்குடி மக்கள் அம்பலாந்துறைச் சந்தி-குருக்கள் மடத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட தகவல் பிரதான வீதியிலிருந்து ஊருக்குள் பரவுகிறது.

காத்தான்குடியை சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்தை ‘குருக்கள் மடத்துப் பையன்’ எனும் நூலாக பசீர் செய்யத் என்பவர் எழுதியிருக்கிறார்.

தனக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களைத் தொகுத்து இக்கடத்தல் படுகொலைகளை தனது நூலில் விபரிக்கிறார்.

தோண்டப்படாத குழிகளுக்குள் தொலைக்கப்படும் வரலாறு என்ற அவரது இப்படைப்பு ஒவ்வொரு காத்தான்குடி மகனுக்கும் சொந்தமானது.

gurukkal-madaththu-paiyan_FrontImage_439

இலங்கையில் இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு பல தடங்கல்களை எதிர் நோக்கியதால் தற்பொழுது இந்நூலை லண்டனில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

புலம்பெயர் தமிழ் அமைப்பொன்று இந்நூலை மனமுவந்து வெளியீடு செய்ய முன்வந்திருக்கிறது. இந்நூல் வெளியீட்டிற்கு லண்டனிலும் பல தமிழர்கள் தரப்பில் ஏற்பட்டிருக்கும் தடைகளையும் தாண்டி நாளை 14ம் திகதி இந்நூல் வெளியீடு செய்யப்படுகிறது.

இந்நூல் வெளியீடு சம்பந்தமாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இதன் ஏற்பாட்டாளர்களை யுவர்காத்தான்குடி தொடர்புகொண்ட போதும் அவர்களிடமிருந்து பதில் கிடைக்கப்பெறவில்லை.

இந்நூல் வெளியீடு சம்பந்தமான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றால் இன்ஷாஅல்லாஹ் அதுபற்றிய விபரங்களைத் தருகிறோம்.

Published by

Leave a comment