– MJ
கீவ்: நேற்றிரவு யுக்ரைன் தலைநகர் கீவ் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பாக் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் லிவர்பூல் கழகத்தை 3:1 கோல் அடிப்படையில் வெற்றிபெற்று ஐரோப்பாவின் சம்பியனாக சாதனை படைத்திருக்கிறது ரியல் மெட்ரிட் கழகம். 2016, 2017 மற்றும் 2018 தொடர்ச்சியான ஹட்ரிக் வெற்றியையும் தனதாக்கி மற்றுமொரு சாதனையையும் படைத்திருக்கிறது ரியல் மெட்ரிட்.
லிவர்பூல் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமட் ஸலாஹ் உடல் உபாதை காரணமாக போட்டியின் ஆரம்பத்தில் வெளியேறியதால் லிவர்பூல் கழகத்தின் வெற்றிக் கனவு சரிய ஆரம்பித்தது.
எனினும் இறுதிவரை அபாரமாக விளையாடிய ரியல் மெட்ரிட் ஐரோப்பியக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
Published by
– MJ
Leave a comment