நாளை இடம்பெறும் சம்பியன் லீக் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ள யுக்ரைன் மைதானத்தின் அழகுத் தோற்றம்

1024px-Kyiv_NSC_Olimpiy– MJ

கீவ்: யுக்ரைனின் தலைநகர் கீவ், ஒலிம்பிக் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி நாளை மாலை 7:45 க்கு இடம்பெறும் ஐரோப்பா சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் நாட்டின் ரியல் மெட்ரிட் கழகமும், இங்கிலாந்தின் லிவர்பூல் கழகமும் மோதவிருக்கின்றன. உலக கால்பந்தாட்ட இரசிகர்களால் அதிக ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் இப்போட்டி இடம்பெறும் கீவ் ஒலிம்பிக் மைதானம் 1923இல் அமைக்கப்பட்டது.

பின்னர் இறுதியாக 2012 ஐரோப்பாக் கிண்ணப் போட்டிகளுக்காக மீளமைக்கப்பட்டது. 70,050 இருக்கைகள் கொண்ட இம்மைதானத்தின் அழகுத் தோற்றமே இதுவாகும்.

1024px-Kyiv_NSC_Olimpiy

இதுவரை ரியல் மெட்ரிட் அணி 17  முறை  இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி, 12 முறை சம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. லிவர்பூல் அணி 7 முறை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி 5 முறை சம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

ரியல் மெட்ரிட் சார்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லிவர்பூல் சார்பாக முகமட் சலாஹ்வும் நாளை போட்டியின் நாயகர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment