ஜெருசலத்தில் தனது புதிய தூதரகத்தை திறக்கிறது அமெரிக்கா

us israelஜெருசலம்: ஜெருசலத்தில் தனது புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறக்க உள்ளது. இந்நடவடிக்கைக்கு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆனால், பலத்தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த ஒன்று கூடியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் உடன் சென்றுள்ளார். இவர்களுடன் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.

பலத்தீனர்கள் கிழக்கு ஜெருசலமை எதிர்கால பாலத்தீன ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமைக் கோரி வருகின்றனர். ஆனால், ஜெருசலேமையே எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதி வந்தது.

us israel
yourkattankudy/palestine-israel

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்தன. ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியது.

ஒரு சிறிய இடைக்கால தூதரகம், திங்கட்கிழமை முதல் ஜெருசலேத்தில் ஏற்கனவே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இயங்க தொடங்கும்.

ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகத்திற்கான பெரிய இடம் பின்னர் தேர்ந்தேடுக்கப்படும். அப்போது டெல் அவீவ் நகரத்தில் இருந்து முழு தூதரகமும் இங்கு இடம் மாற்றப்படும்.

இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதின் 70-ம் ஆண்டு நிறைவு நாளில் அன்று புதிய தூதரகத்தைத் திறக்கும் விதமாக திறப்பு விழா தேதி அமைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment