“வட்ஸ்அப்” இல் “Picture in Picture” (PiP) எனும் புதிய இணைப்பு

whats appலண்டன்: புதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வட்ஸ்அப் செயலியை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் வழிமுறையை அறிவித்தது. அதனை தொடர்ந்து “பிப் மோட் எனும்” அதன் புதியதொரு அம்சத்தையும் அறிவித்துள்ளது. பிப் மோட் என்றால் என்ன.? அதன் விரிவாக்கம் தான் என்ன.? அதன் நன்மை என்ன.? இந்த அம்சம் யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்.?

பிப் மோட் எனும் புதிய மேம்படுத்தல் ஆனது, தற்போது வரையிலாக ஐபோன் பயனர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த அம்சம் ஆண்ட்ராய்ட் தளத்தையும் எட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் வட்ஸ்ஆப் நிறுவனம் ஐஓஎஸ், அண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் என எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை.

பிப் என்பது பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) என்பதின் சுருக்கமாகும். சில மாதங்களுக்கு முன் பரிசோதனை தளத்தில் காணப்பட்ட இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆனது, இறுதியாக ஐஓஎஸ் தளத்தின் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் உருட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே, அதாவது வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை அணுகும் ஆதரவை வழங்கும்.

whats app
yourkattankudy/tech

அதாவது, வாட்ஸ்ஆப் சாட் வழியாக, பகிரப்படும் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இணைப்புகளை வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே பிளே செய்யலாம் அல்லது திறக்கலாம் அல்லது அணுகலாம். அதுமட்டுமின்றி பிளே ஆகி கொண்டிருக்கும் வீடியோவை பார்த்துக்கொண்டே (க்ளோஸ் செய்யாமலேயே) மற்றொரு வாட்ஸ்ஆப் சாட்டிற்கு செல்வது மட்டுமின்றி, வழக்கம் போல மெசேஜ்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

Published by

Leave a comment