காத்தான்குடி “Bபீச்வே” நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறிக்கு சான்றிதழ் வழங்கலும்

  • றியாத் ஏ.மஜீத்

asfar, harisகாத்தான்குடி: “Bபீச்வே” நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  (29) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி “Bபீச்வே” ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி Bபீச்வே ஹோட்டல் உரிமையாளர் எம்.முபீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் .ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் கௌரவ அதிதியாகவும், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எல்.ஹில்மி உள்ளிட்ட வைத்தியர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

beachway

இதன்போது 10 மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கிடையே நீச்சல் போட்டி இடம்பெற்றது. நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும்; 6 மாத கால நீச்சல் பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளினால் பரிசில்களும் சான்றிதழும் வங்கி வைக்கப்பட்டன.

asfar, haris

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளி பொருத்தும் திட்டத்திற்கு நிதியொதுக்கீடு செய்யக்கோரிய மகஜரினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் கையளித்து வைத்தார்.

Published by

Leave a comment