மியான்மர்: தற்போது ரொஹிங்யா முஸ்லிம் அகதிகள் மியான்மர் திரும்புவது பாதுகாப்பானது இல்லை என ஐ.நா எச்சரித்துள்ளபோதும், வங்கதேசத்தில் இருந்து திரும்பி வந்த முதல் ரொஹிங்யா அகதிகள் குடும்பம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் நடந்த வன்செயல்களால், சுமார் 7 லட்சம் ரொஹிங்யாக்கள் எல்லை தாண்டி தப்பிச் சென்றனர்.
இந்த வன்முறைகளை, “இன சுத்திகரிப்பு என்பதற்கான மிகச் சரியான எடுத்துக்காட்டு” என்று ஐ.நா கூறியது. இந்தக் குற்றச்சாட்டை மியான்மர் மறுத்தது.
yourkattankudy/burma
சனிக்கிழமையன்று 5 நபர்கள் கொண்ட அகதிகள் குடும்பம் “மீள் குடியேற்ற முகாமிற்கு” வந்ததாகவும், அவர்களுக்கு தினசரி தேவைகள் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் மியான்மர் தெரிவித்துள்ளது.
Leave a comment