சிரியாவை தாக்கினால் போர் மூளும்: ரஷ்யா

russia butinமொஸ்கோ: சிரியாவின் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக, அமெரிக்கா வான்வழி தாக்குதல்கள் நடத்தினால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. “போர் வரும் ஆபத்தை தடுப்பதே முதன்மையான ஒன்று” என ஐ.நாவிற்கான ரஷ்ய தூதர் வசிலி நபென்ஷியா வியாழனன்று தெரிவித்தார்.

சர்வதேச அமைதிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியுள்ள அவர், இந்த சூழல் “மிகவும் ஆபத்தானது” எனக் கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தயாராகிக் கொண்டு வருகின்றன. ஆனால் சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் நடப்பதற்கான வாய்ப்பை, தன்னால் “விலக்க முடியாது” எனவும் நபென்ஷியா தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து தங்கள் குழு, நிலைமையை “மிக தீவிரமாக” கண்காணித்து கொண்டிருப்பதாக டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.வியாழனன்று ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங், சிரியா அரசு டூமாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான “ஆதரங்கள்” தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.

 

Published by

Leave a comment