வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

washingtonகொழும்பு: கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது சகலதுறை வீரர்வாஷிங்டன் சுந்தர். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் இடக்கை துடுப்பாட்டம் மற்றும் வலக்கை சுழற்பந்து வீச்சாளர்.

இவர் விளையாடிய அணிகள்: இந்திய அணி, இந்தியா- U19, ஐபிஎல்- புனே அணி, தமிழ்நாடு மாநில அணி (ரஞ்சி, துலிப்), டி.என்.பி.எல்- தூத்துக்குடி

இவரது தந்தை சுந்தருக்கு சிறுவயதில் வழிகாட்டியாக இருந்த முன்னாள் ராணுவ வீரர் பி.டி. வாஷிங்டன் நினைவாக இவருக்கு பெயர் வைக்கப்பட்டது.

washington
yourkattankudy/cricket

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் புனே அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

முதல்தரப் போட்டிகளில் இவரது பட்டிங் சராசரி 31.29; பந்துவீச்சு சராசரி 26.93

நிதாகஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் எடுத்த 8 விக்கெட்டுகள் அவருக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தது.

Published by

Leave a comment