கொழும்பு: இன்று நள்ளிரவு (14) முதல் வைபர் (Viber) பிரத்தியேக செய்தி பரிமாற்ற செயலி பாவனைக்கான தடை நீக்கப்படவுள்ளது. வெளிநாட்டிலுள்ள உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிரமம் தொடர்பில் கருத்திற்கொண்டு அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக, ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட இனக் கலவர சம்பவங்களை அடுத்து, கடந்த புதன்கிழமை (07) முதல் சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களின் மூலம் இனவாத கருத்துகள் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு: இன்று நள்ளிரவு (14) முதல் வைபர் (Viber) பிரத்தியேக செய்தி பரிமாற்ற செயலி பாவனைக்கான தடை நீக்கப்படவுள்ளது. வெளிநாட்டிலுள்ள உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிரமம் தொடர்பில் கருத்திற்கொண்டு அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக, ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
Leave a comment