தீ இற்கு முன்னர் பரவும் வதந்திகள்

london fire– AK-11

கொழும்பு: தற்பொழுது நாடு இருக்கும் நிலைமையிலும், சிரியா இருக்கும் நிலைமையிலும் உண்மைகளை விட வதந்திகளே அதிகம் அதிகம் பரப்பப்படுகின்றன. இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது உண்மையானதே. இருந்தும் அன்றைய தாக்குதல்களின்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை இன்று, இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக வதந்திகளை அதிகமானவர்கள் பரப்பி வருகின்றனர்.

இதே போல், சிரியா அழிவுக்குள்ளாகி இருப்பது உண்மையே. எனினும், ஈராக், பலஸ்தீன் புகைப்படங்களை தற்போதைய சிரியா தாக்குதல்களுடன் கலந்து அறியாத்தன்மையில் பிரசுரிப்பதும் வதந்திகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

இப்படி ஆவேசமாக முகநூலில் ஊர்ஜிதமல்லாத செய்திகளை பரப்புவோர் பலர், செய்திகளை உண்மை என்று அறியாமல் கண்களை மூடிக்கொண்டு “மாஷாஅல்லாஹ்”, “அல்லாஹூ அக்பர்” என கொமண்ட் கொடுப்பவர்கள் என்பது வெளிப்படை.

தீயைவிடவும் வதந்திகளைப் பரப்புவோர் விடயத்தில் நாம் அவதானமாக இருக்கவேண்டும்

Published by

Leave a comment