“வாக்குவாதம் நடந்து முடிந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வாகனங்களில் வந்தவர்களே பள்ளிவாயல் தாக்குதலை நடாத்தினார்கள்”

ampara masjidஅம்பாறை: அம்பாறை நகரில் ஒரு குழுவினரால் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளும் ஒரு பள்ளிவாசலும் தாக்கபட்டதை அடுத்து அங்கு ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  அப்பகுதி முஸ்லிம்கள் வழங்கிய தகவலின்படி கடந்த இரவு அங்கிருக்கும் முஸ்லிம்களின் உணவு விடுதி ஒன்றுக்கு வந்த சிங்கள மொழியில் பேசிய சிலர், உணவு அருந்திவிட்டு, உணவில் இருந்த கோதுமை மாவின் அவியாத சில பகுதிகளை காண்பித்து “கடைக்காரர்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை கலந்திருப்பதாக” கூறி குற்றஞ்சாட்டியுள்னர்.

அதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அங்கு கூடிய பலர் அந்தக் கடையை மட்டுமல்லாமல் வேறு சில கடைகளையும், அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றையும் தாக்கியதாக கூறப்படுகின்றது.

ampara masjid
yourkattankudy/ampara

வாக்குவாதம் நடந்து முடிந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வாகனங்களில் வந்தவர்களே தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். இதனால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சிலவும் சேதமடைந்துள்ளன.

 கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் கணிசமாக வாழ்ந்தாலும் அம்பாறை நகரைப் பொறுத்தவரையில் அங்கு சிங்கள மக்களே அதிகம் வசிக்கிறார்கள்.

விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment