பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் அமைச்சரவையில் இன்று மாற்றம்

parliament[1]கொழும்பு: தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  இன்று (25) ஞாயிறு முன்னெடுக்கப்படவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின்போது இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய மற்றும் அதிகூடிய பொறுப்புக்கள் வழங்கப்படவிருப்பதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், பொது நிறுவன அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்பு ஆகிய அமைச்சுப் பதவிகளில் பாரிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை அமைச்சரவை மறுசீரமைப்பின்போது, அரசாங்கத்தை வீரியத்துடன் கொண்டு நடத்தும் வகையில் இளம் இரத்தத்துக்கே அதிக வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாரியளவில் ஊழல், மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கெதிராக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

parliament[1]

உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளைத் தொடர்ந்து அமைச்சரவையில் மறுசீரமைப்பை உருவாக்க தேசிய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

அமைச்சரவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment