சிரியாவில் தொடரும் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 120 பேர் பலி

syriaடமஸ்கஸ்: சிரியாவில் தலைநகர் டமஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முற்றுகைக்கு பின்னர் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் கொடூரமான நாட்களில் திங்கள்கிழமையும் ஒன்றாகும்.

செவ்வாய்க்கிழமை காலையும் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டு வருவதாக “வைட் ஹெல்மட்” என்று அறியப்படும் சிரியா பொது மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

syria

கிழக்கு கூட்டா தலைநகருக்கு அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கடைசி குடியிருப்பு பகுதியாகும். இந்த பகுதி முழுவதும் அரசு கட்டுபாட்டு பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.டூமா, மிஸ்ராபா மற்றும் அல்-நாஷபியாவில் நடத்தப்பட்டுள்ள புதிய வான்வழி தாக்குதல்களில் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்கள் என்கிற கிளர்ச்சியாளர் செயற்பாட்டாளர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

 

 

Published by

Leave a comment