மஹிந்தவின் வெற்றிக்கான காரணம்

mahinda maithiri nimalகொழும்பு: வன்முறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமாக அவருக்கு எதிராக அப்போது வாக்களித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் அவரது பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பாரம்பரியமாகவே பலமாகத்திகழும் தலைநகர் கொழும்பு போன்ற இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ராஜபக்ஷவே பெருவெற்றியை பெற்றுள்ளார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சொந்த ஊரான பொலன்நறுவையிலும் சில இடங்களில் மஹிந்த அணி ஊடுருவி உள்ளது.

‘வெள்ளைவான் கடத்தல் கலாச்சாரம், ஊழல் ஆகியவைதான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு. அவரது ஆட்சி மாறிய பின்னர், இங்கு அப்படியான வன்செயல்கள் குறைந்திருக்கின்றன அல்லது இல்லாது போய்விட்டன என்பது உண்மை, ஆனால் தற்போதைய அரசில் எந்த விதமான முன்னேற்றமும் நடக்கவில்லை என்பது தற்போது மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.

போருக்கு பின்னர் இலங்கை முழுவதும் பெருந்தெருக்களை அமைத்து வசதி செய்தார் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால், இப்போது மாநகர சபைக்கு உட்பட்ட தெருக்கள் கூட சீரமைக்கப்படாமல்  இருக்கும் நிலை இதுவே சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு மஹிந்த அலை ஏற்படக் காரணம்.

இந்த தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடும்படி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களை கேட்டுள்ளார்.தேர்தல் முடிவுகளை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தில் சில மாறுதல்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Published by

Leave a comment