ஜனாதிபதி நாளை காத்தான்குடி விஜயம்

maithiri hizbullah weberகாத்தான்குடி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை புதன்கிழமை காத்தான்குடி நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment