டெல்லி: உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் இந்தியா, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண். சீனூ என்ற இளம் பெண் உருவாக்கியிருக்கும் பெண்களுக்கான உள்ளாடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒருவிதமான பூட்டு அமைப்பு பெண்கள் பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கும். தனது கண்டுபிடிப்புக்கு ‘ரேப் ப்ரூஃப் பேண்ட்டி’ என்று சீனூ பெயரிட்டுள்ளார்.
இந்த உள்ளாடையை வடிவமைப்பதற்கு ‘புல்லட் ப்ரூஃப் வகையிலான துணியை சீனூ பயன்படுத்தியிருக்கிறார். இதில் தலா ஒரு ஸ்மார்ட் லாக், ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் பதிவுக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இந்த இளம்பெண் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு விவசாயி.
தனது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் சீனூ, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி தனது கண்டுபிடிப்பை பாராட்டியிருப்பதாக கூறுகிறார்.
இந்த உள்ளாடையை சுலபமாக வெட்டவோ அல்லது எரிக்கவோ முடியாது, மேலும், இதில் இருக்கும் ஸ்மார்ட் லாக், கடவுச்சொல் இல்லாமல் திறக்காது என்பதையும் குறிப்பிடுகிறார்.
இதில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால் 100 அல்லது எமர்ஜென்சி எண் ஒன்றுக்கு உடனே தொலைபேசி அழைப்பு செல்லும், அதில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆர்.எஸ்ஸின் உதவியால் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடித்துவிடும். அதோடு, பதிவுக்கருவி அக்கம்பக்கத்தில் எழும் ஓசைகளை பதிவு செய்யத் துவங்கிவிடும். “பொதுவாக 100 மற்றும் 1090 ஆகிய எண்கள் எப்போதும் அவசரகால உதவிக்கு வரத் தயாராக இருப்பவை என்பதோடு, காவல்நிலையத்தின் உதவி விரைவில் கிடைக்கும் என்பதால் இந்த தொலைபேசி எண்ணை பதிந்துக்கொள்வது நல்லது” என்று சொல்கிறார் சீனூ.
இந்த உள்ளாடையை தயாரிப்பதற்கு நான்காயிரம் ரூபாய் செலவானதாக சொல்லும் சீனூ, தனது குடும்பத்தினரின் ஆதரவு தனக்கு ஊக்கமளிப்பதாக சொல்கிறார். தனது சுய ஆர்வத்தால், ஆராய்ச்சி செய்து இந்த புத்தாக்கத்தை உருவாக்கியிருப்பதாக கூறும் சீனூ, இதைத் தவிர வேறு சில பொருட்கள் தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
மலிவு விலை பொருட்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்குவதாக கூறும் சீனூ, இன்னும் சற்று விலை அதிகமான துணியையும் பொருட்களையும் பயன்படுத்தினால், பொருளின் தரம் இன்னமும் மேம்படும் என்று சொல்கிறார். ஆனால் அதற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சீனூவுக்கு நிறுவனங்களோ அல்லது அரசோ உதவி செய்தால் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்று கருதுகிறார்.
“இப்போது ஒரு மாதிரி மட்டுமே தயாரித்து எனது லட்சியப்பாதையை தொடங்கியிருக்கிறேன்” என்று சொல்கிறார் சீனூ.
Published by
டெல்லி: உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் இந்தியா, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண். சீனூ என்ற இளம் பெண் உருவாக்கியிருக்கும் பெண்களுக்கான உள்ளாடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒருவிதமான பூட்டு அமைப்பு பெண்கள் பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கும். தனது கண்டுபிடிப்புக்கு ‘ரேப் ப்ரூஃப் பேண்ட்டி’ என்று சீனூ பெயரிட்டுள்ளார்.
Leave a comment