– எம்.ரீ. ஹைதர் அலி
காத்தான்குடி: ஊழலற்ற நகர ஆட்சியினை முன்னோக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையிலான அணியினர் இம்முறை காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்கான பிரதான போட்டியாளர்களாக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கழமிறங்கியுள்ளனர்.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தராசு சின்னத்தில் போட்டியிடும் குறித்த அணியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் இணைப்புச் செயலாளருமான முபீன் (BA) உள்ளிட்ட சமூக அக்கறை மற்றும் மார்க்கப்பற்றுள்ள, கடந்த காலங்களில் மக்களின் நலனுக்காக செயற்பட்டு மக்கள் அபிமானத்தினைப் பெற்ற வேட்பாளர்கள் பலரும் போட்டியிடுகின்றனர்.
மேலும் இவ்வணியில் பிரதான வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடந்த காலங்களில் பிரதேச அபிவிருத்தி, மக்களின் உரிமைசார் பிரச்சினைகள், வாழ்வாதார மேம்படுத்தல் போன்ற பல்வேறு தன்னிகரற்ற சேவைகளை ஆற்றிவந்த நிலையில் மக்களின் அமோக வரவேற்பினைப் பெற்று இம்முறை காத்தான்குடி நகரசபையினை இன்ஷா அல்லாஹ் கைப்பற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1. பதுரியா வட்டாரம் – MIM. ஜகானி
2. அல் அக்ஸா வட்டாரம் – ALM. அன்சார் ஹாஜி
3. அன்வர் வட்டாரம் – ULMN. முபீன் (BA)
4. நூரானியா வட்டாரம் – AL. அலி அக்பர் (நெளபர்)
5. தாருஸ்ஸலாம் வட்டாரம் – MIM. பஸ்ஹான்
6. மௌலானா வட்டாரம் – AGS. நளீமா
7. மீராபள்ளி வட்டாரம் – PM. அமீர் அலி (றமீஸ்)
8. ஹிழுரியா வட்டாரம் – (Eng) M. ஷிப்லி பாறூக்
9. ஹசனாத் வட்டாரம் – CB. பதுறுதீன் ஹாஜி
10. ஜாமியுழ்ழாபிரீன் வட்டாரம் – AM. ஜெஸ்மி
Published by
காத்தான்குடி: ஊழலற்ற நகர ஆட்சியினை முன்னோக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையிலான அணியினர் இம்முறை காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்கான பிரதான போட்டியாளர்களாக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கழமிறங்கியுள்ளனர்.
Leave a comment