உலகின் அதிகவேக சதம் சமன்

rohit-sharmaடெல்லி: இந்தூரில் இலங்கைக்கு எதிராக இந்தூரில் நேற்று இடம்பெற்ற (22) டி20 போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோகித்சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் வங்கதேசத்திற்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்தே இதுவரை டி20 போட்டிகளில் அதிகவேகமான சதமாக இருந்தது.

 

தனது இன்றைய சதத்தின் மூலம் இந்த சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ரோகித், 10 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

rohit-sharma

மேலும்,டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.

Published by

Leave a comment