இலங்கை அணியின் பயிற்சியாளராக ஹத்துருசிங்க

Chandika-Hathurusingha1கொழும்பு: இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்படவுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால நேற்று (08) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக அவர் கடமையாற்றவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சந்திக ஹத்துருசிங்க, பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றி வரும் நிலையில், இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக அவரை நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை கடந்த மாதம் அறிவித்திருந்தது.

ஹத்துருசிங்கவை முழுமையாக விடுவிக்குமாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவினால், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு எழுத்து மூல கோரிக்கையொன்று விடுவிக்கப்பட்டிருந்தது.

Chandika-Hathurusingha1
சந்திக ஹத்துருசிங்கyourkattankudy

சந்திக ஹத்துருசிங்க, பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக கடந்த 2014 மே மாதம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பங்களாதேஷ் அணி, பல்வேறு முன்னடைவுகளை பெற்றிருந்தது. குறிப்பாக, சம்பியன் கிண்ணத்தின் அரையிறுதி வரை பங்களாதேஷ் அணி முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பயிற்சியாளராக கடமையாற்றிய கிரகம் போர்ட், கடந்த ஜூன் மாதம் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, குறித்த பதவி வெற்றிடமாக இருந்தது. இதனையடுத்து, இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்கா அணி வீரர், நிக் பொதாஸ் நியமிக்கப்பட்டார்.

Published by

Leave a comment