ஜனவரி மாதம் உள்ளுராட்சி தேர்தல்

polling+station[1] electionகொழும்பு: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பின்போடப்பட்டு வந்த இலங்கையின் உள்ளுராட்ச்சி சபைகளின் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவதற்கான அரச வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகான சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா நேற்று (24) மாலை கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபை திருத்தச் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த சபைகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கைகல் உள்ளடக்கப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததன் காரணமாக சம்பந்தப்பட்ட தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே தேர்தல் தோல்வியை தவிர்ப்பதற்காக அரசாங்கம் இவ்வாறு அரச வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை வேண்டுமென்றே தாமதித்து வருவதாக கூட்டு எதிர் கட்சியினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர்.
இந்த பின்னணியில் அமைச்சர் பைசர் முஸ்தப்பா இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment