டுபாய்: இலங்கை T 20 அணியின் தலைவர் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கிரிக்கட் கூறியிருந்தது.
அக்டோபர் 29-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்தில் நடக்க உள்ள சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளது. ஆனால் தரங்க ,சந்திமால், மலிங்கா, மத்யூஸ் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி விளையாட மறுத்துள்ளனர்.இதன் விளைவாக, முழு T20 தொடருக்கும் இவர்கள் இல்லாத ஒரு அணியை இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திசரா பெரேராவை இத்தொடருக்கான தலைவராக அறிவிக்க இலங்கை கிரிக்கெட் அணி பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Published by
டுபாய்: இலங்கை T 20 அணியின் தலைவர் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கிரிக்கட் கூறியிருந்தது.
Leave a comment