மின்விசிறிகளைப் பயன்படுத்தியும் கைவிடப்பட்ட முக்கிய போட்டி

  • MJ

fans in groundஹைதரபாத்: இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையிலான 3வது இருபது-20 போட்டி நேற்று 13 வெள்ளிக்கிழமை ஹைதரபாத் ராஜீவ் காந்தி சர்வதேசக் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற இருந்தது. தொடர்ந்து ஐந்து நாட்களாக ஹைதரபாத்தில் மழைபெய்து வந்த நிலையில் எப்படியாவது இப்போட்டியை நடாத்துவதற்கு இந்திய கிரிக்கட் வாரியம் அதிகப் பிரயத்தனம் எடுத்தது.

ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இப்போட்டி மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

fans in ground
Yourkattankudy/cricket

அதற்காக மைதானத்தின் ஈரளிப்பை எப்படியாவது அகற்றுவதற்கு அதிக எண்ணிக்கையில் மின்விசிறிகள் 24 மணித்தியாலங்களும் இயக்கப்பட்டன.

எனினும் மழை ஆங்காங்கே தொடர்ந்ததால், 3வது போட்டி பந்து எதுவும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

1994 இல், இலங்கையில் இடம்பெற்ற சிங்கர் கிண்ண சுற்றுப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக ஆர். பிரேமதாச மைதானத்தை ஹெலிகொப்டர்கள் வரவழைத்து, மைதானம் உலரப்பட்டிருந்த நிலையில், மழை தொடர்ந்ததால் அப்போட்டி கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment