“வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும்”-டொனால்ட் டிரம்ப்

trump v kimவோஷிங்டன் DC: அமெரிக்கா தன்னையும் தன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் முதல் முறையாக பேசிய அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபரை நையாண்டி செய்து, “ராக்கெட் மனிதர், தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுதத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிர்வாகப் பகுதியான குவாம் தீவை ஒட்டி ஏவுகணை சோதனை நடத்தும் திட்டத்தை கடந்த மாதம் வடகொரியா அறிவித்த பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது.

trump v kim

ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கும் தாங்கள் அடிபணியப் போவதில்லை என்றும், சர்வதேச அச்சுறுத்தல்களை தங்களை மேலும் உறுதிப்படுத்தி, அணு ஆயுதத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கே உதவும் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்திருக்கிறார்.

Published by

Leave a comment