காத்தான்குடி: காத்தான்குடி 3 ஹூதா வீதியைச் சேர்ந்த எம்.ஐ. ஜூனைத் ஆசிரியர் இன்று மட்டு போதனா வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மட்/ பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலயத்தின் விஞ்ஞானப்பாட ஆசிரியரும், காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார்.
காத்தான்குடியின் புகழ்பெற்ற சிறந்த ஆசிரியரும், மக்களால் மதிக்கப்படும் ஓர் சிறந்த கலைஞருமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்பதுடன், அவரது மறைவில் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்னாரது குடும்பத்தினருடன் எமது “யுவர்காத்தான்குடி” மற்றும் அதன் வாசகர்களும் பங்கேற்கின்றோம்.
Leave a comment