மஹ்ரூப் ஆசிரியர் காலமானார்

mahroof sirகாத்தான்குடி: காத்தான்குடி 3 கடற்கரை வீதியைச் சேர்ந்த விஞ்ஞானப் பாட ஆசிரியர் எம். மஹ்ரூப் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. காத்தான்குடியின் புகழ்பெற்ற விஞ்ஞானப்பாட ஆசிரியராகத் திகந்த அவரிடம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்விகற்றிருக்கின்றனர்.

1980களின் பிற்பாடு, காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் ஹிக்மா அகடமியில் தனியார் வகுப்புக்களை நடாத்தி தனது கற்பித்தல் செல்வாக்கிற்கு அத்திவாரத்தை ஏற்படுத்தியிருந்தார்.

mahroof sir
சேவை நலன்பாராட்டு விழா-2014

1980-1990 களின் யுத்த செயற்பாடுகள் உச்சத்திலிருந்த காலப்பகுதியில் அவரது கல்விச்சேவை எமது ஊருக்கு அளப்பரிய பங்காற்றியது.

காத்தான்குடியில் விஞ்ஞான ஆசிரியராகப் போற்றப்பட்ட மர்ஹூம் நஸார் ஆசிரியரைத் தொடர்ந்து, தனது இறுதிப்பயணத்தில் இணைந்து எங்களைவிட்டும் விடைபெறுகிறார் மஹ்ரூப் ஆசிரியர்.

அன்னாருக்கு அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, சுவர்க்கத்தை அருள்பாளிக்க “யுவர்காத்தான்குடி” வாசகர்கள் சார்பாகப் பிரார்த்திக்கின்றோம்.

Published by

Leave a comment