“இரசிகர்களால் இனிமேல் இடைஞ்சல்கள் ஏற்படாது என்பதை இலங்கை கிரிக்கட் உத்தரவாதமளிக்க வேண்டும்” ஐ.சி.சி

  • MJ

ground 1கொழும்பு: எதிர்வரும் 31ம் திகதி கொழும்பில் இடம்பெறும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் இலங்கை இரசிகர்களால் போட்டிக்கு இடைஞ்சல்கள் ஏற்படாது என்பதை இலங்கை கிரிக்கட் சபை உத்தரவாதமளிக்க வேண்டும் என ஐ.சி.சி. கோரிக்கை விடுத்துள்ளது.

ground 1

பல்லேகலையில் இடம்பெற்ற 3வது போட்டியில் இலங்கையின் தோல்வியைத் தாங்காத முடியாத இரசிகர்கள், தைதானத்தை நோக்கி போத்தல்களையும், செருப்புக்களையும் வீசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன்காரணமாக போட்டி 32 நிமிடங்கள்வரை இடை நிறுத்தப்பட்டிருந்தது.

ground

இந்நிலையில், இவ்வாறான சம்பவம் எதிர்வரும் போட்டிகளில் இடம்பெறமாட்டாது என்பதை இலங்கை கிரிக்கட் சபை உத்தரவாதமளிக்க வேண்டும் என ஐ.சி.சி, இலங்கை கிரிக்கட் சபையிடம் கேட்டிருக்கின்றது.MJ

Published by

Leave a comment