– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுள்ள புதிய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சிக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று (13) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் சிநேகபூர்வ சந்திப்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி,காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார ஜெயலால், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தௌபீக், செயலாளர அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி உட்பட சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர்,செயலாளர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்களுக்குமிடையில் பல்வேறு விடயங்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டது.
இங்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சேவைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by
– பழுலுல்லாஹ் பர்ஹான்
Leave a comment