வோஷிங்டன் DC:`அமெரிக்க ராணுவப் படைகள் முழு அளவில், தகுந்த இடங்களில் தயாராக உள்ளன. வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் புதிய வழியை தேர்ந்தெடுப்பார் என நம்புகிறேன்` என டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் மூளுவதற்கு டிரம்ப் முயல்வதாக வட கொரியா குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலடியாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒரு பகுதியான குவாமிற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்து பசுபிக் தீவுகளுக்கான உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணைத் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் அடங்கிய அறிவுப்புகளை அங்கிருக்கும் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை விநியோகம் செய்தது.
அந்த அறிவுரைகளில்,` எந்த ஒளிப்பிழம்பையும், தீப்பந்துகளையும் பார்க்காதீர்கள். அது உங்கள் கண்களை குருடாக்கக் கூடும்` என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Published by
வோஷிங்டன் DC:`அமெரிக்க ராணுவப் படைகள் முழு அளவில், தகுந்த இடங்களில் தயாராக உள்ளன. வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் புதிய வழியை தேர்ந்தெடுப்பார் என நம்புகிறேன்` என டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் மூளுவதற்கு டிரம்ப் முயல்வதாக வட கொரியா குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலடியாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
Leave a comment