கொழும்பு: மிரிஹான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இன்று தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 32 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மிரிஹான சட்டவிரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் குடிவரவு குடியகல்வு தினைக்கள அதிகாரிகள், அந்த அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, 32 அகதிகளும் கொழும்பு அருகே உள்ள கல்கிசை பகுதியில் தனி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அகதிகளுக்கு வேறொரு நாட்டில் அரசியல் புகலிடம் கிடைக்கக் கூடிய முயற்சியில் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தற்போது ஈடுபட்டுள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இலங்கையில் தங்களுக்கு ஐ. நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மூலம் அரசியல் புகலிடம் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
ஆனால், ஐ.நா அகதிகளுக்கான கொள்கை பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாததால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் அகதிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களைத் தனி இடத்தில் வைத்துப் பராமரிக்கும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திற்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
Published by
கொழும்பு: மிரிஹான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இன்று தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 32 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மிரிஹான சட்டவிரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
Leave a comment