சவுதியிலிருந்து வந்தவர் விமானநிலையத்தில் உயிரிழப்பு!

airportகொழும்பு: சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.தெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-282 என்ற விமானத்தில் குறித்த நபர் இன்று அதிகாலை 4.20 மணியளவில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

எப்படியிருப்பினும் அந்த நபரின் மரணத்திற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Published by

One response to “சவுதியிலிருந்து வந்தவர் விமானநிலையத்தில் உயிரிழப்பு!”

  1. ஆழ்ந்த அனுதாபங்கள்.

Leave a comment