கொழும்பு: இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு ஆணை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கட்டளையின் பேரில் அவரது செயலாளர் ஒஸ்ரின் ஃபெர்ணான்டோ இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.இந்த அரசாணையில், பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் மற்றும் வாயு பொருட்களை வழங்குதல், விநியோகம் செய்தல் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகங்களிலுள்ள கொள்கலன்களிலிருந்து எண்ணெய் அல்லது எரிபொருட்களை வெளியேற்றுதல், எடுத்து செல்லல், விநியோகம் உள்ளிட்ட பணிகளும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பணிக்கு திரும்பாதவர்கள் தங்கள் பணிகளை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கிறது.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதையடுத்து நள்ளிரவு நேரம் கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையின் பிரதான நுழைவாயிலை போலீஸார் திறக்க சென்றிருந்த வேளை அங்கு அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது. ராணுவம் உதவிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளேயிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Published by
கொழும்பு: இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு ஆணை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
Leave a comment