நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக மெய்பாதுகாவலராக இருந்தவர் உயிரிழப்பு

gun_4யாழ்ப்பாணம்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். இந்த தாக்குதலின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. குறித்த மெய்ப்பாதுகாவலர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் இருந்துள்ளதுடன், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

 

Published by

Leave a comment