“கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை”

Qatar_Flag3[1]கொழும்பு: கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,எந்த அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க இராஜ்ஜியமாக கட்டார் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடா நாடுகளால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் கட்டாருக்கு இன்றும் இலங்கையிலிருந்து பலர் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள்.இதன்மூலம் கட்டாரில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரிவதாக குறிப்பிட்டார்.

மேலும், கட்டாருக்கான விமான சேவைகளிலும் தற்போதும் எந்தவித பாதிப்புக்களும் இல்லை, இலங்கை பணியாளர்கள் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment