யாழ்ப்பாணம்: யாழில் வானத்தில் இருந்து வீழ்ந்த ஒருவகையான திரவம் காரணமாக 18 மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 18 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் காலையில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, குறித்த மஞ்சள் நிறத்திலான திரவம் மாணவர்களின் மீது வீழ்ந்துள்ளது. இதன் போது மயக்கமடைந்த மாணவி ஒருவரும் ஆசிரியர் ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், குறித்த இருவருடன், மேலும் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வானில் இருந்து வீழ்ந்த திரவம் உடலில் பட்டதும் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Published by
யாழ்ப்பாணம்: யாழில் வானத்தில் இருந்து வீழ்ந்த ஒருவகையான திரவம் காரணமாக 18 மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 18 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment