டோஹா: கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாயன்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் வழியாக கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானத்தில் மாடுகள் வந்தடைந்தன. இதற்காகவே அமைக்கப்பட்ட புதிதாக பால் பண்ணைக்கு அம்மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டன. கத்தார் நிறுவனமான பவர் இண்டர்நஷனல் இம்மாடுகளை வாங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உள்ள அனைத்து மாடுகளும் வந்தபிறகு, நாட்டின் பால் தேவையை 30 சதவிகிதம் வரை பூர்த்தி செய்யலாம் என பவர் இண்டர்நஷனல் நிறுவனத்தின் தலைவர் முத்தஸ் அல் காயாத், ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் கடந்த மாதம் தெரிவித்தார்.
அல் காயாத்தால் தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய பால் நிறுவனத்தால், பொருட்கள் விற்கப்பட உள்ளன. இத்தகைய தடைகாரணமாக கட்டாரில் உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
Published by
டோஹா: கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
Leave a comment