லாஹூர்: சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் போது இந்திய அணியின் தலைவர் கோஹ்லியும், பும்ராவும் தன்னை ஸ்லெட்ஜ் செய்ததாக பாகிஸ்தான் அணி வீரர் பகார் ஸமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகார் ஸமான்.
இவர் 106-பந்துகளில் 114-ஓட்டங்கள் குவித்தார். இந்நிலையில் இவர், சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் போது இந்திய வீரர்களான கோஹ்லியும், பும்ராவும் தன்னை ஸ்லெட்ஜ் செய்ததாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது கோஹ்லி, சீக்கிரம் ஒரு விக்கெட்டை எடுங்கள். அதைத் தொடர்ந்து வரும் வீரர்கள் அனைவரும் சரிவர் என்று கூறினார்.
இதை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அதே போன்று பும்ரா பந்து வீச்சின் போது, விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனேன்.
ஆனால் அது No Ball ஆனது. அப்போதிலிருந்து பும்ராவும் சில வார்த்தைகளை கூறிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் பின்னால் ஆடிக் கொண்டிருக்கிறாய், முன் பக்கமாகவும் நீ ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஸ்லெட்ஜ் என்பது கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புடையது, அதைத் தான் இந்திய வீரர்கள் செய்தனர், இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பகார் ஸமான் கூறியுள்ளார்.
Published by
லாஹூர்: சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் போது இந்திய அணியின் தலைவர் கோஹ்லியும், பும்ராவும் தன்னை ஸ்லெட்ஜ் செய்ததாக பாகிஸ்தான் அணி வீரர் பகார் ஸமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகார் ஸமான்.
Leave a comment