“கொழும்பு, பேராதனை பல்கலைக்கழகங்கள் தனியாருக்கு வழங்கப்படாது”

peradeniyaகொழும்பு: கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து அகற்றி அவற்றை தனியார் துறைக்கு வழங்கும் நோக்கம் எதுவும் இல்லையென அரசாங்கம் அறிவித்தது. நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

உயர்கல்வி தொடர்பாக கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து அகற்றி, அவற்றை இலாபமீட்டும் சுயாதீன நிறுவனங்களாக மாற்றவிருப்பதாக ஊடக செய்திகளை மேற்கோள்காட்டி சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தலைமையிலான உயர்கல்வி அமைச்சு தொடர்பான மேற்பார்வை குழுவில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ எம்பி குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, அரசாங்கம் இது தொடர்பில் எந்தவொரு யோசனை முன்வைக்கவோ அல்லது தீர்மானம் எடுக்கவோ இல்லை. மேற்பார்வைக் குழுவில் பல்வேறு விடயங்கள் பேசப்படும். அவற்றில் பேசப்படும் விடயங்கள் அரசாங்கத்தின் யோசனைகள் அல்ல என்றார்.

Published by

Leave a comment