றியாத்: சவுதி மன்னரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ரமலான் அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார். மன்னரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் கடவுளுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று.
அதன் விளைவாக “மிகவும் அதிர்ச்சியடைந்த” அரசர் சல்மான், அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவு வழங்கியதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.வெள்ளிக்கிழமையன்று அந்த செய்தித்தாள் மன்னிப்பு கோரியது. அதில் அன்சி, அரசர் சல்மானை ‘ஹலீம்’ அல்லது மிகவும் பொறுமையானவர் மற்றும் ‘ஷ்தீத் அல் இகாப்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டுச் சொற்களுமே கடவுளை குறிப்பதற்கான சொற்களாகும்.
“இஸ்லாமியர்களின் இரண்டு புனித மஸ்ஜித்களாக கருதப்படும் மெக்கா மற்றும் மதினா ஆகியவற்றை பாதுகாக்கும் அரசரை குறித்து எழுத்தாளர் அவ்வாறு எழுதியது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அரசருக்கு கடவுள் அத்தகைய குணங்களை கொடுத்திருந்தாலும், அவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; இரண்டு புனித மஸ்ஜித்களை, இஸ்லாமை, மக்களை, தாயகம் மற்றும் மக்களை காப்பதனால் கடவுள் அவரை பாதுகாக்கட்டும்“ என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
அந்த செய்தித்தாளிற்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்படும் என சில சவுதி ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.
Published by
றியாத்: சவுதி மன்னரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ரமலான் அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார். மன்னரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் கடவுளுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று.
Leave a comment