கொழும்பு: பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்த ஆண்டு இறுதியில் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடியது.
அப்போது, இலங்கை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் சில வீரர்கள் காயமடைந்ததுடன், ஆறு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இலங்கை உட்பட அநேக கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்வதை தவிர்த்து வந்தன.
இதன் நடுவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மட்டும் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது. இந்நிலையில் 7 வருடங்கள் கழித்து இந்த ஆண்டு இறுதியில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published by
கொழும்பு: பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்த ஆண்டு இறுதியில் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடியது.
Leave a comment