லசித் மலிங்கவுக்கு ஒரு ஆண்டு தடை

Malinga srilankaகொழும்பு: இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை பேசியதாக லசித் மலிங்கவுக்கு ஒரு ஆண்டு தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகரா இலங்கை அணி வீரர்கள் சம்பியன்ஸ் தொடரின் போது மிகவும் குண்டாக இருந்ததாக விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இலங்கை வீரர் மலிங்கா, குரங்குடன் அமைச்சரை ஒப்பிட்டு பேச அது சர்ச்சையாக வெடித்தது.இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரிய குழு மலிங்காவிடம் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை நேற்று மேற்கொண்டது.

Malinga srilanka

தனது செயலுக்கு மலிங்க மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், மலிங்கவுக்கு ஒரு ஆண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், ஆறு மாதம் சஸ்பெண்டும், ஒரு போட்டியில் 50 சதவீத ஊதியம் அபராதமும் விதித்துள்ளது.

Published by

Leave a comment