டோஹா: கட்டாரிலுள்ள தனது இராணுவத் தளத்தை மூடுவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை துருக்கி நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இராணுவத் தளம் வளைகுடாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு அரபு நாடுகளிடமிருந்து வந்த இந்த கோரிக்கையானது டோஹாவுடனான அதன் உறவுகளில் குறுக்கிடுவதாகவும் துருக்கி வலியுறுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டு கட்டாருடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என துருக்கியின் பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக கட்டார் மீதான தடையை நீக்க 13 கோரிக்கைகளை நிபந்தனையாக சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.
இந்த 13 கோரிக்கைகளில், கட்டாரிலுள்ள துருக்கியின் இராணுவ தளத்தையும் உடனடியாக மூடவேண்டுமெனவும் நிபந்தனை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
டோஹா: கட்டாரிலுள்ள தனது இராணுவத் தளத்தை மூடுவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை துருக்கி நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இராணுவத் தளம் வளைகுடாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment