– MJ
லண்டன்: ஐக்கிய ராச்சியத்தில் தற்பொழுது கோடைகாலம் நிலவி வருகிறது. வெப்பநிலை 31 செல்சியஸ் வரைக்கும் சென்றுகொண்டிருக்கின்றது. இதன்காரணமாக வீடுகளில் அதிவெப்பம் நிலவுவதால், குறிப்பாக இரவு வேளைகளில் வீடுகளில் மின்விசிறிகள் இல்லாமல் வசிக்க முடியாத நிலை அங்கு காணப்படுகிறது.
சராசரியாக 9 மாதங்கள் மின்விசிறிகள் இன்றி ஐக்கிய இராச்சியத்திலுள்ள வீடுகளில் வசிக்க முடியும். காலநிலை கோடை காலத்தில் மாறுவதால் வெப்பம் தற்பொழுது வீடுகளில் சூழ்ந்துள்ளன. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இரவு வேளைகளில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
அங்குள்ள வீடுகளில் மின்விசிறிகள் பொருத்தப்படுவதில்லை. எனினும் நடமாடும் மின்விசிறிகள் வீடுகளில் பாவிக்கப்படுகின்றன.
இவ்வாரம் கடும் வெப்பம் அங்கு நிலவுவதால், மக்களின் அத்தியவசியப் பொருளாக மின்விசிறிகள் காணப்படுகின்றன. மின்சார உபகரணங்களை விற்கும் நிறுவனங்கள், சுப்பர் மார்க்கட் போன்றவற்றில் மின்விசிறிகள் ‘அவுட் ஓஃப் ஸ்டொக்’ என எழுதி ஒட்டப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
Published by
– MJ
Leave a comment