ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படைப் பிரிவின் மூன்று பேரைக் கைது செய்தது சவுதி

saudiறியாத்: ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படை என்ற பிரிவின் மூன்று பேர், சவுதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.வெள்ளிக்கிழமையன்று, சவுதி அரேபியாவின் கடற்பரப்பிலுள்ள மர்ஜான் எண்ணெய் வயலை நெருங்கி வந்த ஒரு படகில் ஈரான் படையின் உயரதிகாரிகள் இருந்தனர் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

மூன்று படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

saudi
சவுதி அரேபியாவின் கடற்பரப்பிலுள்ள மர்ஜான் எண்ணெய் வயல்

இந்த எண்ணெய் வயல் மீதான தீவிரவாத தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததாக சவுதி செய்தி நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. அலைகளால் ஒரு எண்ணெய் வயலை நோக்கி அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகள் மீது, சவுதி எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாக ஈரானிய ஊடகங்கள் சனிக்கிழமையன்று தெரிவித்தன.

Published by

Leave a comment