இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த போட்டியை மறக்க முடியாது!

pakistanலண்டன்: 180 ரன்கள் வித்தியாசத்தில் சம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோற்றுள்ளது. இது பல வகைகளிலும் இந்தியாவுக்கு மறக்க முடியாத போட்டியாகும். ஐசிசி போன்ற முக்கிய 50 ஓவர் தொடர்களில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை என்ற சகாப்தம் மாறிவிட்டது. இதுவரை நடந்த எந்த ஒரு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே கிடையாது.

ஆனால், நேற்று இப்படி ஒரு முக்கியமான ஐசிசி சம்பியன்ஸ் டிராபியில் அதாவது மினி உலக கோப்பையில், பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. அதுவும் 180 ரன்கள் வித்தியாசத்தில்.

pakistan

ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு அதிகமான ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

அதேபோல இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

Published by

Leave a comment