இந்தியாவை வீழ்த்தி சம்பியனானது பாகிஸ்தான்

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராத் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமீர் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
5 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்த இந்தியா போட்டியில் தடுமாறியது.

யுவராஜ்சிங் மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தோனி மற்றும் ஜாதவ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டம் மேற்கொண்டார்.

6 சிக்ஸர் அடித்து, 43 பந்துகளில் 76 ரன்கள் பெற்ற எதிர்ப்பாராவிதமாக ரன்அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டுமே இந்தியா பெற்றது. இதனால், 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர் மற்றும் ஹாசன் அலி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை எடுத்தனர்.
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பஃக்கார் ஜமான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Published by

Leave a comment